Funny Jokes in Tamil

Funny Jokes in Tamil | One Liner Jokes

Funny Jokes are some emotional and physiological indication to the experience of fun. The best sensations that future hold for this country’s youth is to entertain them with the best jokes and make them laugh like something. These Funny Jokes in Tamil which will make you forget your worries. Let’s see which hilarious jokes are a barrel of laughs, and which ones fall flat.

Funny Jokes in Tamil

Funny Jokes in Tamil

Tell Me A Joke is a fun website with full of jokes. You can find Short Jokes, Funny Jokes, Hilarious Jokes, Kids Jokes, Love Jokes, Non-Veg Jokes, One Liner Jokes and Jokes in Other Languages. Tellmeajokes.com is the best place to have fun.

Funny Jokes in Tamil

Funny Jokes in Tamil

Funny Jokes in Tamil

வீட்ல கணவன் மனைவிக்கு இடையே சண்டை! மனைவி கோவிச்சிகிட்டு அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா! கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்! அவ வரவேயில்லை கணவன் விடாமல் போன் செய்தான்… ஒரு நாள் மாமியார் போன எடுத்து “எத்தன தடவ சொல்றது? இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி தொந்தரவு பண்ணறே? என்று சத்தம் போட்டார். அதுக்கு மருமகன், என்னவோ தெரியல அத்தே! ஒவ்வொரு தடவையும் இதை கேக்கும்போது மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருக்கு! அதான் அடிக்கடி திரும்ப திரும்ப போன் பண்றேன் என்றானே பார்க்கலாம்.. மாமியார் அந்த பக்கம் மயக்கமாயிட்டாங்க என்பதை சொல்லவா வேண்டும்.

“கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது.”

“அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற…

“சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!”

அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுப் பிசகாய்
உன்னையும் படைச்சானே… ஈசன்”

“நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு”

“ஏன்.. என்னாச்சு?”

“கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்… கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்”

குணா கமல்…சேது விக்ரம்…சின்னத் தம்பி பிரபு…சின்ன ஜமீன் கார்த்திக்…
இப்படி மூளை வளர்ச்சியில்லாம முன்னுக்கு வந்தவங்க நிறையப் பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்….thats life

“பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு.”

“ஏன்?”

“பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்.”

Funny Jokes in Tamil

Funny Jokes in Tamil

ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!

ஏன்?

?
?
?
?
?

ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!

“டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க… போங்கன்னு சொல்றோம்ல!”

“ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?”

“நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு!”

Click here for Funny Jokes in Punjabi

சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா முதல்வராகவும், அதிமுகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர். அவர், ஆட்சியில் அரசே குடிநீர் பாட்டில்கள் விற்பனையை ஆரம்பித்தது. அதற்கு ‘அம்மா’ குடிநீர் என பெயர் சூட்டப்பட்டது. அம்மா பெயரில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது.

இதுபற்றி ராமுவும், சோமுவும் என்ன பேசிக்கொள்கிறார்கள் கேளுங்கள்: ராமு: அண்ணே.., அம்மா குடிநீர் திட்டத்த அரசு நிறுத்திருமான்ணே.
சோமு: அட பேரிக்கா மண்டையா ஏன்டா அப்படி சொல்ற.
ராமு: இனிமே எல்லாமே சின்னம்மாதாண்ணே.. அப்புறம் எப்படி அம்மா குடிநீர் பாட்டில சப்ளை பண்ணுவாங்க?
சோமு: அட வண்டுருட்டான் தலையா, அதுக்கென்னடா. அர லிட்டர் தண்ணி பாட்டில அறிமுகம் செஞ்சா போச்சி.
ராமு: புரியிற மாதிரி சொல்லுங்கண்ணே.
சோமு: ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீருக்கு பெயரு அம்மா குடிநீருன்னா, அர லிட்டர் தண்ணி பாட்டில் பேரு சின்னம்மான்னுதானடா வைக்க முடியும். அதானடா உலக நடப்பு. ராமு: அக்காங்ணே.

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்ன்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

ஏன்……என்னாச்சு..?

பேசியதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அறுக்கிறாளே…!

அவள் கணவன் பிரபல ஹோட்டலில் மெய்ண்ட்டனன்ஸ் எஞ்சிநியர். ஓட்டலுக்கு ஃபோன் செய்கிற போதெல்லாம்,
“அவரு காஃபி மேக்கரை நோண்டிகிட்டு இருக்காருங்க” என்று பதில் சொல்வார்கள்.
’என்ன இழவு இந்த ஹோட்டலில் காஃபி மேக்கர் எப்பப் பாரு ரிப்பேர் போலிருக்கு’ என்று எண்ணிக் கொள்வாள். ஒருநாள் அவள் கணவன் வெளியில் போயிருந்த போது வீட்டுக்கு ஒரு பெண் வந்தாள்.
“அவர் வெளியே போயிருக்கார் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என்றாள்.
“ஒண்ணும் அர்ஜண்ட் இல்லை. சும்மா இந்தப் பக்கம் வந்ததால் பாக்கலாம்ன்னு வந்தேன். நாளைக்கு ஆஃபீஸ்லயே பார்த்துக்கறேன்” என்று அந்தப் பெண் புறப்பட்டாள்.
“ஆஃபீஸ்லயா? நீ அவரோடயா வொர்க் பண்றே?”
“ம்ம்ம்”
“நீயும் மெய்ண்ட்டனன்ஸ்ல இருக்கியா?”
“ம்ம்ஹூம், நா காஃபி மேக்கரா இருக்கேன்”

“நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.”

“நான் என்ன சாதிச்சேன்?”

“பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!”

Tamil Jokes

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

Funny Jokes in Tamil

Funny Jokes in Tamil

FaceApp உலகத்துக்கு சொல்ல வரது ஒன்னே ஒன்னு தான்.. மேக் அப் போட்டா ஆம்பள பையன் கூட கிளாமரா தான் இருப்பான்.. அதுனால ஓவரா சீன் போடாதிங்க.. ???

“யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு..”

“சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு.”

“யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!”

முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். “அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?.” அதற்க்கு அப்பா சொன்னார், “இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..””அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?”. அப்பா, “நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..””அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?”.

அப்பா சொன்னார், “இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..”.

“ஏன்யா வித்தவுட்லே போறே….. இதிலே ஏ.சி. கேக்குதா…?”

“எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!”

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

செந்தில்: அண்ணே…. சாப்ட்வேர்னா என்ன…? ஹார்ட்வேர்னா என்னன்னே….?
கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா…….’செடி’ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு….. ‘மரத்த’ புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு…….. இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ‘ஆல் இன் ஆல்’ அழகு ராஜா தேவைங்குறது என்னங்க நான் சொல்றது………

மருத்துவர் : நான் கொடுத்த மருந்துல ஏதாவது “சேஞ்ச்” இருந்ததா…..?

நோயாளி : பாட்டிலை காலி பண்ணிக் கூடப் பார்த்துட்டேன் டாக்டர். ஒரு ஐம்பது பைசா கூட இல்ல…

காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…

காதலி: !!!!

You may also like Tell me a joke buddy

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது
24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார், தனது 40 வயதில் திருமணம் செய்த அவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்
எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.
யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.

#மழைக்கு ஒதுங்க #மரங்கள் இல்லை என கவலை வேண்டாம்.
இனி மழையும் #இருக்காது!!. ?

மக்கு: ஏன் எல்லாம் ஓடறாங்க?

ஜக்கு: இது பேர் ஓட்டப்பந்தயம் ‘கப்’ கிடைக்கணம்னு ஓடறாங்க.

மக்கு: யார் கப் வாங்குவாங்க?

ஜக்கு: யார் பர்ஸ்ட் வராங்களோ அவங்க கப் வங்குவாங்க!

மக்கு: அப்பறம் எதுக்கு எல்லாரும் ஓடறாங்க?

“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?”

“இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே”

“எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!”

ஒருத்தன் வாட்ஸப்ல “என் மகன் +2 தேர்வில் 1180 மதிப்பெண்கள்”ன்னு அனுப்பிருந்தான்..
உனக்கு தான் கல்யாணமே ஆகலயேடான்னு கேட்டேன்..
தெரில வேற க்ரூப்ல ஒருத்தர் போட்டாரு பார்வர்ட் பண்ணேங்கிறான்..
அட பார்வர்ட் மெசேஜ் பைத்தியங்களா.. ?

More Funny Jokes:

Really Funny Jokes – Crazy Fun Jokes

Funny Jokes of the day

Funny One Liner Jokes

Funny Short Jokes

Funny Jokes in English

Funny Jokes in Tamil

Funny Jokes in Hindi

Funny Jokes in Punjabi

Funny Jokes in Telugu

Hope you enjoyed the Funny Jokes in Tamil posted here.

For more Funny Jokes in Tamil, feel free to comment below.

Incoming related searches for Funny Jokes in Tamil

I need a funny joke

can u tell me a joke

short joke of the day

tell me jokes

short jokes

funny joke of the day

funny short joke

non veg jokes

joke of today

funniest short jokes

funny kids jokes

funniest joke to tell

one liner jokes

best non veg jokes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *